விக்ஸ்சுக்கும், வயிற்றின் தொப்பைக்கும் என்ன சம்பந்தம்?... தெரிந்தால் விடவே மாட்டீங்க How to reduce waist with Vicks VapoRub and Camphor

பொதுவாக சளி, இருமல், மூக்கடைப்பு, தொண்டை வலி என்று பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் பொருள் தான் விக்ஸ். இந்த பொருள் உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க மட்டுமின்றி, பலவாறும் பயன்படுகிறது. ஆனால் விக்ஸைக் கொண்டு தற்போது பலரும் கஷ்டப்பட்டு வரும் ஓர் பிரச்சனையான தொப்பையைக் குறைக்கலாம் என்பது தெரியுமா?

இதுவரை தொப்பையைக் குறைக்க எத்தனையோ வழிகளை முயற்சித்திருப்பீர்கள். ஆனால் விக்ஸ் கொண்டு தொப்பையைக் குறைக்கும் முறை பற்றி கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இங்கு அது குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

விக்ஸ்
சளி, மூக்கடைப்பு போன்றவற்றின் போது பயன்படுத்தப்படும் விக்ஸைக் கொண்டு குறிப்பிட்ட இடத்தில் உள்ள கொழுப்புக்களை கரைக்க முடியும். விக்ஸை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்யும் போது, அதனால் அவ்விடத்தில் கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறை வேகமாக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும்.

தழும்புகள் இருக்காது
விக்ஸைக் கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலம் கொழுப்பு செல்கள் அழிக்கப்பட்டு, விரைவடைந்த சருமம் சுருங்கும் போது ஏற்படும் தழும்புகள் நீக்கப்படுவதோடு, சருமமும் அழகாக இருக்கும்.

விக்ஸை தனியாக பயன்படுத்தக்கூடாது
விக்ஸை தனியாக பயன்படுத்துவதற்கு பதிலாக, அத்துடன் கொழுப்புச் செல்களை வேகமாக எரிக்க பயன்படும் சில பொருட்களான கற்பூரம், பேக்கிங் சோடா, ஆல்கஹால் போன்றவற்றுடன் கலந்து பயன்படுத்தினால், இதன் செயல்முறை இன்னும் வேகமாக்கப்படும்.

தொப்பைக் கரைக்கும் க்ரீம்
தேவையான பொருட்கள்: விக்ஸ், கற்பூரம், பேக்கிங் சோடா, ஆல்கஹால்

செய்முறை:
முதலில் ஒரு பிளாஷ்டிக் டப்பாவில் கற்பூரத்தைப் பொடி செய்து சேர்த்து, அத்துடன் பேக்கிங் சோடா, விக்ஸ் மற்றும் ஆல்கஹால் சேர்த்து நன்கு க்ரீம் போன்று கலந்து கொள்ள வேண்டும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?
மாலையில் அல்லது உடற்பயிற்சி செய்யும் முன், இந்த க்ரீம்மை வயிறு போன்ற கொழுப்பைக் கரைக்க நினைக்கும் பகுதிகளில் தடவி வட்ட சுழற்சியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் ஒரு பிளாஷ்டிக் கவர் கொண்டு அப்பகுதியை சுற்றிக் கொண்டு 30 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், இரவில் படுக்கும் முன் இவ்வாறு வயிற்றில் தடவி பிளாஷ்டிக் கவர் கொண்டு சுற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

குறிப்பு
இச்செயல்முறையை பின்பற்றும் போது சமச்சீரான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும். முயற்சித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

How to reduce waist with Vicks VapoRub and Camphor

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்

| Privacy Policy