தாஜ்மகால் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத உண்மைகள்! Taj mahal unknown facts


 தாஜ்மகால், உலக காதலின் இலச்சினையாய் திகழும் ஓர் இந்திய கலை பொருள். இதன் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்திருந்தளும், இதனுள் உறங்கிக் கொண்டிருக்கும் உயிரின் காதலும், நேசமும் விலைமதிப்பற்றதாகும்.
பல ஆண்டுகளாக, பல ஆயிரக்கணக்கான வேலையாட்களை கொண்டு விலைமதிப்பற்ற சலவை கற்கள் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது தாஜ்மகால். உண்மையில், இதன் நேர் எதிராக பிரதிபலிக்கும் மற்றுமொரு தாஜ் மகாலையும் கட்ட ஷாஜாகான் நினைத்திருந்தார்.
காலத்தை கடந்து நிற்கும் இந்த காவிய சின்னத்தை பற்றிய சில வியக்க வைக்கும் தகவல்கள் பற்றி இனி காணலாம்....
தாஜ்மகால் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத தகவல்கள்!

தகவல் # 1

தாஜ்மகால் அதிகாலை பின்க் நிறத்திலும், நாள் வேளையில் வெள்ளை நிறத்திலும், இரவு நிலா வெளிச்சத்தில் கோல்டன் நிறத்திலும் காட்சியளிக்கும்.

தகவல் # 2

தாஜ்மகாலின் தூண்கள், வெளிப்புறத்தில் சாற்றி சாந்திருப்பது போன்று தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால், பூகம்பம் வந்தாலும் கூட, அவை கட்டிடத்தின் மீது விழாமல், வெளிப்புறத்தில் தான் விழும்.

தகவல் # 3

மிக ரம்மியமான இந்த கட்டிடத்தை கட்ட 28 வகையான விலைமதிப்பற்ற சலவை கற்கள் பயன்படுத்தப்பட்டன.

தகவல் # 4

தாஜ்மகாலை நீங்கள் எந்த திசையில் இருந்து பார்தால்லும் சமச்சீரான அளவில் / தோற்றத்தில் தான் தெரியும். ஆனால், உள்ளே இருக்கும் கல்லறைகள் இரண்டும் வெவ்வேறு அளவில் இருக்கின்றன. பெண் கல்லறையைவிட, ஆண் கல்லறை பெரிது என கூறப்படுகிறது.

தகவல் # 5

அந்த காலத்தில் தாஜ்மகாலை கட்டிமுடிக்க, 32 மில்லியன் இந்திய பணம் செலவாகி இருக்கலாம் என்றும். அதன் இன்றைய மதிப்பு, 1 பில்லியன் டாலர் என்றும் கூறப்படுகிறது.

தகவல் # 6

வெள்ளை தாஜ்மகாலை போலவே, கருப்பு தாஜ்மகால் ஆறுக்கு மறுபுறம் கட்டும் யோசனை இருந்தது.

தகவல் # 7

பேரரசர் ஷாஜகான், தாஜ்மகாலை கட்டிமுடிதவுடன், கட்டிட பணியில் வேலை செய்த அனைவரின் கைகளையும் வெட்டிவிட கூறினார் என்றும், தாஜ்மகால் போன்ற மற்றொரு கட்டிடம் உருவாகிவிட கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என்றும் வரலாற்று தகவல்களின் மூலம் அறியப்படுகிறது.

தகவல் # 8

தாஜ்மகாலை கட்ட, கட்டிட பொருட்களை கொண்டுவர 1000 யானைகள் பயன்படுத்தப்பட்டன.

தகவல் # 10

22 ஆண்டுகளில் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க 22,000 பேர் வேலை செய்துள்ளனர்.
Taj mahal unknown facts

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்

| Privacy Policy