ddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd

தினமும் முட்டை உண்பதால் ஏற்படும் நன்மைகள்! கண்டிப்பாக பாருங்கள் ! வீடியோ Why You Should Be Eating More Eggs

ddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddddd


www.indiasian.com Why You Should Be Eating More Eggs உடல் நல்ல கட்டமைப்புடன் இருக்க வேண்டுமானால் தினமும் முட்டையை சாப்பிட்டு வாருங்கள். ஆரோக்கியமான இதயம் கொலஸ்ட்ரால் அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அவை இதய நோய்க்கு வழிவகுக்கும். எனவே நிறைய மக்கள் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடமாட்டார்கள். ஆனால் முட்டையில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது, இதய நோய்க்கு வழிவகுக்காது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பாலுணர்ச்சியை அதிகரிக்கும் நிச்சயம் இந்த விஷயம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உண்மையிலேயே முட்டையை சாப்பிட்டால், பாலுணர்ச்சியனது அதிகரிக்கும். ஆரோக்கியமான மூளை முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாகவும், அதன் ஆற்றலும் அதிகரிக்கும். புற்றுநோய் முட்டையை தவறாமல் தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்தானது குறையும். கர்ப்பிணிகளுக்கு... பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தைக்கு வேண்டிய சத்தானது கிடைத்து, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம். வலிமையான எலும்புகள் முட்டையை அன்றாடம் உட்கொண்டு வந்தால், எலும்புகளானது வலிமையுடன் இருக்கும். முட்டையில் நல்ல கொலஸ்ட்ரால் வளமாக இருப்பதால், இதனை உட்கொண்டால் இதய நோய், பக்கவாதம் மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். அதிலும் ஒரு நாளைக்கு தவறாமல் 2 முட்டையை எடுத்து வருவது இன்னும் சிறந்தது. ஆரோக்கியமான முடி மற்றும் நகம் தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், நகம் மற்றும் முடியானது ஆரோக்கியமாக இருக்கும். இரத்த கொலஸ்ட்ராலை அதிகரிக்காது முட்டையில் எவ்வளவு தான் கொலஸ்ட்ரால் இருந்தாலும், அவை இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்காது. பொதுவாக கொலஸ்ட்ரால் உள்ள பொருட்களை டயட்டில் சேர்த்து, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று சொல்வது தவறு. ஏனெனில் சாதாரணமாக நம் உடலில் உள்ள கல்லீரலானது அன்றாடம் கொலஸ்ட்ராலை அதிக அளவி உற்பத்தி செய்யும். எப்போது கொலஸ்ட்ரால் நிறைந்த முட்டையை அதிகம் எடுத்து வருகிறோமோ, அப்போது கல்லீரலானது கொலஸ்ட்ரால் உற்பத்தியை குறைத்துவிடும். இதனால் இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் கண் ஆரோக்கியம் முட்டையின் மஞ்சள் கருவில் லூடீன் மற்றும் ஜியாசாந்தின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக நிறைந்திருப்பதால், அவை கருவிழியை பாதுகாத்து, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்

| Privacy Policy